- Advertisement -
நானி நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாய் நான்னா படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். இவர் சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தில் மிருணாள் தாகூரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நானியின் முப்பதாவது திரைப்படம் ஆன இந்த படத்தை சௌரவ் இயக்கியுள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவியிலும் தேசம் அப்துல்லா இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது.




