spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹிப் ஹாப் ஆதியின் 'வீரன்' படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

ஹிப் ஹாப் ஆதியின் ‘வீரன்’ படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிப் ஹாப் ஆதி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

we-r-hiring

தற்போது மரகத நாணயம் பட இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில் வீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆதிரா ராஜ், வினை ராய், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஹிப் ஹாப் ஆதியே இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த ஜூன் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.இது, மின்னல் தாக்கத்தினால் தனக்கு ஏற்படும் சக்தியை கொண்டு சொந்த ஊரை ஆபத்திலிருந்து காப்பாற்ற முயலும் ஒரு இளைஞனின் கதையாகும்.

ஒரு பேன்சி காமெடி என்டர்டைன்மெண்ட் படமாக உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.மேலும் இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அமேசான் பிரைம் என்ற ஓ டி டி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ