Homeசெய்திகள்சினிமாஓடிடி-க்கு வரும் ஹார்ட் பீட்.... ரிலீஸ் தேதி அறிவிப்பு...

ஓடிடி-க்கு வரும் ஹார்ட் பீட்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், தனது அடுத்த புதிய தொடரான ஹார்ட் பீட்டை, வரும் மார்ச் மாதத்தில் வெளியிட உள்ளது.

கொரோனா காலத்திற்கு பிறகு, திரைப்படங்களின் எண்ணிக்கைக்கு ஈடாக வெப் தொடர்களும் உருவாகி வருகின்றன. தொடக்கத்தில் ஆங்கில மொழி மற்றும் இந்தியில் மட்டும் அதிக எண்ணிக்கையில் வெப் தொடர்கள் வெளியாகி வந்தன. ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கத்தை தொடர்ந்து தற்போது தமிழிலும் அடுத்தடுத்து வெப் தொடர்கள் வௌியாகின்றன. அறிமுக இயக்குநர்கள் மட்டுமன்றி முன்னணி இயக்குநர்களும் வெப் தொடர்களை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொடர் ஹார்ட் பீட். பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் திரைக்கதை எழுதி உள்ளார். மேட்லி பூஸ் இந்த தொடருக்கு இசை அமைத்திருக்கிறார். நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கமர்ஷியல் கதையாக இளைஞர்கள் கொண்டாடும் விதமாக இந்த தொடர் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை அனுமோல், தீபா பாலு, யோக லட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரித்து உள்ளது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். இந்த தொடரிலிருந்து ஏற்கனவே ஒரு தீம் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் மார்ச் 8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த தொடர் வெளியாகிறது.

MUST READ