- Advertisement -
நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலி செய்யக்கூடாது என்ற கொள்கை நிலைப்பாட்டை வைத்திருக்கிறேன் என நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் சிவகார்த்திகேயன், விஜய், யோகி பாபு, சந்தானம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நகைச்சுவை நாயகனாக நடித்து பிரபலம் அடைந்தவர் சதீஷ். நகைச்சுவை நாயகனாக நடித்து வந்த சதீஷ் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது கான்ஜூரிங் கண்ணப்பன் என்ற திரைப்படத்தில் சதீஷ் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. படத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
