Homeசெய்திகள்சினிமா'ரஜினியை நான் அடித்து விட்டேன்'.... பிரபல நடிகர் ஓப்பன் டாக்!

‘ரஜினியை நான் அடித்து விட்டேன்’…. பிரபல நடிகர் ஓப்பன் டாக்!

-

'ரஜினியை நான் அடித்து விட்டேன்'.... பிரபல நடிகர் ஓப்பன் டாக்!ரஜினி ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன முத்து திரைப்படம் கடந்த வாரம் ரீ ரிலீஸ் ஆனது. பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்த இந்த படத்தை 4K -5.1 சவுண்ட் வெர்சனில் ரீ ரிலீஸ் செய்துள்ளனர். 1995இல் வெளியான முத்து படத்திற்கு, அந்த சமயத்தில் என்ன வரவேற்பு கிடைத்ததோ அதே வரவேற்பு தற்பொழுது 2k கிட்ஸ்கள் மத்தியிலும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இது சம்பந்தமாக முத்து திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் நடந்த பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் முத்து படப்பிடிப்பின் போது ரஜினியை தான் அடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.'ரஜினியை நான் அடித்து விட்டேன்'.... பிரபல நடிகர் ஓப்பன் டாக்!

முத்து படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சியில் ரஜினியை பொன்னம்பலம் அடிப்பது போன்று இருக்கும். அந்த காட்சி படமாக்கப்படும் போது பொன்னம்பலம் ரஜினியை உண்மையில் அடித்து விட்டாராம். அதாவது பொன்னம்பலம் அடித்துக் கொண்டிருக்கும் போது ரஜினி முன்னாடி வந்ததால் அடி உண்மையாகவே அவரின் மேல் பட்டு விட்டதாம். இதனால் படப்பிடிப்பில் இருந்தவர்கள் ரஜினியை தாங்கிப் பிடித்த நிலையில் பொன்னம்பலத்திற்கு மிகவும் பயமாக இருந்ததாம். ஆனால் ரஜினி “மன்னித்து விடுங்கள் என் தவறுதான்” என்று பொன்னம்பலத்தை கூல் செய்துவிட்டாராம். இத்தனை வருடங்கள் கழித்து பொன்னம்பலம் கூறிய இந்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ