- Advertisement -
தனது கதாபாத்திரத்தால் வரும் சர்ச்சைகள் குறித்து எனக்கு கவலை இல்லை என்று பிரபல நடிகை சஞ்சனா நடராஜன் தெரிவித்துள்ளார்.

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகி சஞ்சனா நட்ராஜன். சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சஞ்சனா, தொடர்ந்து பல இணைய தொடர்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, நோட்டா, கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இறுதியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சஞ்சனா நடித்திருந்தார். இதில், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார்.


தற்போது சஞ்சனா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் போர். பெஜாய் நம்பியார் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரும் இணைந்து இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். டி சீரிஸ் நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளது. இப்படம் கடந்த மார்ச் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கல்லூரியில் ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டு தரப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்படும் சம்பவங்களை மையப்படுத்தி இத்திரைப்படத்தை எடுத்துள்ளனர்.



