Homeசெய்திகள்சினிமா"அங்க படம் நடிக்குறதுக்கு மூளைய கழட்டி வச்சுரனும்"... வில்லன் நடிகரால் கொந்தளிக்கும் ரசிகர்கள்😡!

“அங்க படம் நடிக்குறதுக்கு மூளைய கழட்டி வச்சுரனும்”… வில்லன் நடிகரால் கொந்தளிக்கும் ரசிகர்கள்😡!

-

தென்னிந்திய படங்களில் நடிக்கும் போது மூளையை கழட்டி வைத்துவிட்டு தான் நடிக்க வேண்டும்” என்று பாலிவுட் நடிகர் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் ராகுல் தேவ். இவர் தமிழில் நரசிம்மா, முனி, ஆதவன், 10 எண்றதுக்குள்ள, வேதாளம் உள்ளிட்ட  படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

கடைசியாக தி லெஜண்ட் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் கலந்துகொண்ட ராகுல் தேவ் தென்னிந்திய சினிமா குறித்து பேசி உள்ளார்.

Rahul Dev

அதில் “தென்னிந்திய படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. ஆனால் அங்கு நிஜ வாழ்க்கையில் நடக்காத எல்லைக்கு மீறிய ஆக்சன் காட்சிகள் நிறைய இடம் பெறுகின்றன. நான் படித்த பின்புலத்திலிருந்து வந்திருப்பதால் அங்குள்ள படங்களில் நடிக்க என் மூளையை கழட்டி வைக்கவேண்டியுள்ளது.

நிஜ வாழ்க்கையில் இருவர் சண்டையிடும் போது சட்டையை கிழித்து எரிந்துவிட்டு தங்கள் உடற்கட்டை காண்பிக்க மாட்டார்கள். கமர்சியலாக பார்க்கும்போது அதில் எந்த தவறும் இல்லை தான். சொல்லப்போனால், நிறைய மக்கள் அப்படி பார்ப்பதை தான் விரும்புகின்றனர். அது சரியா, தவறா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் படைப்பாற்றல் வெவ்வேறு விதங்களில் நாம் வெளிப்படுத்தலாம்.” என்று பேசியுள்ளார்.

ஆனால் “மூளையை கழட்டி வைத்துவிட்டு தான் நடிக்க வேண்டும்” என்று அவர் சொன்னது தற்போது சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ