spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யா எவ்வளவு பெரிய வில்லன் என்று எனக்கு தான் தெரியும்.... நடிகர் கார்த்தி ஓபன் டாக்!

சூர்யா எவ்வளவு பெரிய வில்லன் என்று எனக்கு தான் தெரியும்…. நடிகர் கார்த்தி ஓபன் டாக்!

-

- Advertisement -

நடிகர் கார்த்தி தனது அண்ணன் சூர்யா குறித்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யா எவ்வளவு பெரிய வில்லன் என்று எனக்கு தான் தெரியும்.... நடிகர் கார்த்தி ஓபன் டாக்!

நடிகர் கார்த்தி ஜப்பான் படத்திற்கு பிறகு பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் மெய்யழகன் எனும் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தினை 96 படத்தில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரன் ராஜூ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து டெல்டா கல்யாணம் எனும் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்ததாக இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தியிடம், விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

we-r-hiring

அதற்கு கார்த்தி, “அவர் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதுதான் எனக்கு தெரியும். ஆனால் அப்பொழுது நான் பார்க்கவில்லை. படம் ரிலீஸான பின் தான் பார்த்தேன். நான் அப்படியே மிரண்டு விட்டேன். அவரை வில்லனாக பார்ப்பது உங்களுக்கு தான் புதிது. நான் சின்ன வயதிலிருந்து அவரை அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு தான் தெரியும் அவர் எவ்வளவு பெரிய வில்லன் என்று” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.

MUST READ