Homeசெய்திகள்சினிமா'இந்த படத்திற்காக மேஜிக் கற்றுக் கொண்டேன்'..... வித்தைக்காரன் படம் குறித்து நடிகர் சதீஷ்!

‘இந்த படத்திற்காக மேஜிக் கற்றுக் கொண்டேன்’….. வித்தைக்காரன் படம் குறித்து நடிகர் சதீஷ்!

-

- Advertisement -

நகைச்சுவை நடிகர் சதீஷ் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே நாய் சேகர், கான்ஜுரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சதீஷ் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.'இந்த படத்திற்காக மேஜிக் கற்றுக் கொண்டேன்'..... வித்தைக்காரன் படம் குறித்து நடிகர் சதீஷ்!

அடுத்ததாக சதீஷ் நடிப்பில் வித்தைக்காரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை வெங்கி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் வி பி ஆர் இசையமைத்துள்ளார். இதில் சதீஷ் உடன் இணைந்து சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், ரமேஷ் திலக், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர். மேலும் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து வித்தைக்காரன் படமானது பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் புதிய ரிலீஸ் தேதியையும் அறிவித்தனர்.'இந்த படத்திற்காக மேஜிக் கற்றுக் கொண்டேன்'..... வித்தைக்காரன் படம் குறித்து நடிகர் சதீஷ்!இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சதீஷ், “இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நான் நடித்திருக்கிறேன். மேஜிக் மேனாக ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறேன். இன்னொரு கேரக்டர் சஸ்பென்ஸ். படத்தை பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக ஒருவரிடம் மேஜிக் கற்றுக் கொண்டேன். உங்கள் அனைவருக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும்” என்று சதீஷ் பேசியுள்ளார்.

MUST READ