‘மாஸ்டர்’ திரைப்படம் தனக்கு ஏமாற்றம் அளித்ததாக சாந்தனு ஓப்பனாக பேசியுள்ளார்.
சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள ‘ராவணக் கோட்டம்’ படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. விக்ரமன் சுகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
சாந்தனு கிராமத்து கதை களத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலமாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே படத்தின் ப்ரோமோஷனுக்காக சாந்தனு பல நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் தனக்கு ஏமாற்றம் அளித்ததாக சாந்தனு ஓப்பனாக பேசியுள்ளார். மாஸ்டர் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்ததற்காக பார்கவ் என சாந்தனுவை நம் நெட்டிசன்கள் வச்சு செய்தது அனைவரும் அறிந்ததே!
“விஜய் அண்ணா கூட மாஸ்டர் படத்துல நடிச்சதுக்கு அப்புறம் என்னுடைய சினிமா கேரியர் உயரம்னு நினைச்சேன். முதல்ல படம் ஷூட்டிங் போது படத்துல எனக்கு நிறைய வாய்ப்பு இருந்தது.
ஆனா கடைசில படத்துல நம்ம கேரக்டர் வரவே போறதில்லன்னு தெரிஞ்சா யாராவது வந்து படத்தோட ப்ரொமோஷனுக்கு இன்டர்வியூ கொடுப்பாங்களா. எல்லோரும் அதைத்தான் கலாய்ச்சாங்க, ஏன்டா இவ்வளவு இன்டர்வியூ கொடுத்துருக்க, ஆனா கொஞ்சம் கூட படத்தில இல்லையேடா அப்படின்னு.
30 நாள் என்னை வச்சு ஷூட் பண்ணாங்க. ஆனா கடைசில படத்தில் வந்தது 10 நிமிஷம். எனக்குன்னு தனியா சாங் இருந்தது. பாதி நாளுக்கு மேல விஜய் அண்ணக்கும் எனக்கும் மட்டும் பைட் ஷூட் நடந்துச்சு. ஆனா படத்துல எதுமே வரல” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.