நிர்வாணமாக நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலா பால் தற்போது பிருத்வி ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடு
ஜீவிதம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அரபு நாட்டுக்கு வேலை செல்லும் கதாநாயகன் அங்கு ஆடு மேய்க்க விடப்பட்டு பாலைவனத்தில் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை.
பிரபல எழுத்தாளர் பென் யாமின் எழுதிய நாவலை மையமாக வைத்து
இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றி இருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றியது. அதில் இடம் பெற்றிருந்த பிருத்விராஜ் அமலாபாலின் லிப்லாக் காட்சி பேசுபொருளானது.
இந்நிலையில் இது குறித்து அமலா பாலிடம் கேட்கப்பட்ட போது “ஆடு
ஜீவிதம் படத்தின் கதையை சொன்ன போதே லிப்லாக் காட்சி இருப்பதை
சொல்லிவிட்டார்கள். இந்தப் படத்தின் கதைக்கும் காட்சிக்கும் அது அவசியப்
பட்டதால் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக கூட நடித்தேன். கதைக்கு என்னைப் பொருத்தவரை கதைக்கு
தேவைப்பட்டதால் அதற்கேற்ப நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதிலும் ஆடையே இல்லாமல் நடித்த எனக்கு லிப்லாக் காட்சியில் நடிப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை” என்று பேசியுள்ளார்.