Homeசெய்திகள்சினிமாபிறந்தநாளில் கூடிய குடும்பம்… இளையராஜா உடன் கங்கை அமரன் குடும்பத்தினர்!

பிறந்தநாளில் கூடிய குடும்பம்… இளையராஜா உடன் கங்கை அமரன் குடும்பத்தினர்!

-

கங்கை அமரன் குடும்பத்தினர் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகின் பிரபல இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள் தனது 80 வது பிறந்த நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜாவிற்கு கங்கை அமரன் குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அண்ணன் தம்பியான இளையராஜாவும் கங்கை அமரனும் 90களில் இருந்தே இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். இருந்த போதிலும் ‘சின்ன ராமசாமி பெரிய ராமசாமி’ என்ற படத்தில் பணியாற்றும்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின் இவர்கள் இருவரும் பேசுவதோ சந்தித்துக் கொள்வதோ இல்லை என்று அந்த சமயங்களில் தகவல் வெளியானது.

அதன் பிறகு 13 வருடங்கள் கழித்து கடந்த ஆண்டு இளையராஜாவும் கங்கை அமரனும் சந்தித்து பேசிக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து தற்போது இளையராஜாவின் பிறந்த நாளான இன்று கங்கை அமரன் மற்றும் அவரது மகன்களான இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி உள்ளிட்டோர் இசைஞானி இளையராஜாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து, பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இவர்களின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ