- Advertisement -
தன் மகள் பவதாரிணி மறைந்த நிலையில், தந்தையும், இசையமைப்பாளருமான இளையராஜா உருக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜவின் மகள் பவதாரிணி. அவருக்கு வயது 47 ஆகும். இவர், ராசய்யா படத்தில் இடம்பெற்ற மஸ்தானா மஸ்தானா என்ற பாடலை பாடி இருந்தார். இப்படத்தின் மூலம் அவர் பாடகியாகவும் அறிமுகம் ஆனார். இவருடன் பிறந்த சகோதரர்கள் தான் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா. கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் பவதாரிணி பாடியிருக்கிறார். தென்னிந்திய படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
அன்பு மகளே… pic.twitter.com/GgtnKGyvQ1
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 26, 2024

இதனிடையே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், இலங்கை மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்தவுடன் இளையராஜவும், அவரது சகோதரர் யுவன் சங்கர் ராஜாவும் இலங்கை புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்து பவதாரிணியின் உடலை விமானம் மூலமாக சென்னை கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பவதாரிணியின் உடலுக்கு நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் பாடகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் கார்த்தி, விஷால், சிவகுமார், ஆகாஷ், பிரேம்ஜி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல பாடகர்கள் விஜய் ஆண்டனி, மனோ மற்றும் விஜய்யின் அம்மாகவும், பாடகியுமான சோபாகவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், நடிகர்கள், நடிகைகள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





