spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் படத்தால் ரஜினி பட வாய்ப்பை இழந்தேன் - இந்துஜா

விஜய் படத்தால் ரஜினி பட வாய்ப்பை இழந்தேன் – இந்துஜா

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் மேயாதா மான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அதைத் தொடர்ந்து பில்லா பாண்டி, ஆர்யாவுடன் மகாமுனி, விஜய்யுடன் பிகில், மூக்குத்து அம்மன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷூக்கு மனைவியாக இந்துஜா நடித்திருப்பார். தற்போது பார்க்கிங் திரைப்படத்தில் அவர் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பிகில் திரைப்படத்தில் நடிகை இந்துஜா கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருப்பார். அதில், இந்துஜாவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. குணச்சித்திர வேடத்தில் நடித்த இந்துஜாவுக்கு நாயகியாக நடிக்க வாய்ப்புகள் வந்தன.

இந்நிலையில், விஜய் படத்தில் நடித்ததால், ரஜினி பட வாய்ப்பை மிஸ் பண்ணியதாக இந்துஜா வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் பிகில் படத்தில் நடித்த சமயத்தில் எனக்கு தர்பார் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் ரஜினியுடன் படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரம் கிடைத்தது. ஆனால், பிகில் படத்தில் நடித்து வந்ததால், கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டு தர்பார் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறியுள்ளார். தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்த கதாபாத்திரத்திற்கு தான் இந்துஜாவை படக்குழு பேசியிருப்பார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ