spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹீரோ & வில்லன்... ஒரே நாளில் இரு படங்களில் களமிறங்கும் உலகநாயகன்!

ஹீரோ & வில்லன்… ஒரே நாளில் இரு படங்களில் களமிறங்கும் உலகநாயகன்!

-

- Advertisement -

கமல்ஹாசன் நடிக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

we-r-hiring

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதம் முழுமையாக நிறைவடைந்து விடும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதேசமயம், கமல்ஹாசன், ப்ராஜெக்ட் கே எனும் திரைப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடிக்கிறார்.
வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார்.
சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார்.

கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் இந்த படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 மற்றும் ப்ராஜெக்ட் கே இரு திரைப்படங்களும் ஒரே நாளில் மோத இருப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

MUST READ