Homeசெய்திகள்சினிமாஇன்று வெளியாகும் 'இந்தியன் 2' அப்டேட்..... படக்குழு அறிவிப்பு!

இன்று வெளியாகும் ‘இந்தியன் 2’ அப்டேட்….. படக்குழு அறிவிப்பு!

-

கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இன்று வெளியாகும் 'இந்தியன் 2' அப்டேட்..... படக்குழு அறிவிப்பு!இந்தப் படமும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தை போல் ஊழல், அரசியல் பின்னணியில் உருவாகியுள்ளது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு முக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிக்கும் முழுவதும் நிறைவடைந்தது. அதன் பின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து இந்த படம் தேர்தலின் காரணமாக2024 மே மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் கசிந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஜூன் 13ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் செய்திகள் பரவி வருகிறது.
இன்று வெளியாகும் 'இந்தியன் 2' அப்டேட்..... படக்குழு அறிவிப்பு!இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது ரிலீஸ் குறித்து அப்டேட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டரில் இந்தியன் 2 என்ற தலைப்புடன் ZERO TOLERANCE என்ற டேக் லைன் இடம் பெற்றுள்ளது. மேலும் ஊழல் தேசத்திற்கு புற்றுநோயை உண்டாக்கும் உயிரை கொல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ