Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2 படத்தின் 'நீலோற்பம்' பாடல் வெளியீடு!

இந்தியன் 2 படத்தின் ‘நீலோற்பம்’ பாடல் வெளியீடு!

-

சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படமானது மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப் பிரம்மாண்டமாகவும் உருவாகியுள்ளது. இந்தியன் 2 படத்தின் 'நீலோற்பம்' பாடல் வெளியீடு!இந்தியன் படத்தின் முதல் பாகத்தைப் போலவே இந்தியன் இரண்டாம் பாகமும் ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் தான் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். ரவி வர்மன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் தவிர சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியன் 2 படத்தின் 'நீலோற்பம்' பாடல் வெளியீடு!இந்த படமானது 2024 ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. எனவே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் பாரா எனும் முதல் பாடல் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது நீலோற்பம் எனும் இரண்டாவது பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இருவருக்குமான பாடலாகும்.

மேலும் இந்த பாடலை ஸ்ருதிகா சமுத்ரலா பாடி இருக்கும் நிலையில் இதன் பாடல் வரிகளை தாமரை எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி நேரு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ