Homeசெய்திகள்சினிமாசுனாமியாக வெகுண்டெழுந்த இந்திய சினிமா… 1300 கோடி வசூல் கொட்டிக் கொடுத்த படங்கள்!

சுனாமியாக வெகுண்டெழுந்த இந்திய சினிமா… 1300 கோடி வசூல் கொட்டிக் கொடுத்த படங்கள்!

-

இந்திய சினிமா கடந்த சில ஆண்டுகளாக துவண்டு கிடக்கிறது. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் குறிஞ்சி மலர் போல எப்போதாவது தான் காணக் கிடைத்தன. இந்நிலையில் இந்தாண்டு குறிப்பாக இந்த மாதத்தில் இந்திய சினிமா சுனாமி போல வெகுண்டெழுந்துள்ளது.
ஆகஸ்ட் 2023 இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு நினைவுச்சின்ன மாதமாக வரலாற்றில் பொறிக்கப்படும் என்று சொன்னால் அது மிகையாகாது. கொரோனாவுக்கு அப்புறம் சினிமாவின் மறுமலர்ச்சி காலம் என்று இந்த மாதத்தை குறிப்பிடலாம்.

ஏன் என்று கேட்கிறீர்களா, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியான படங்கள் வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்றன.
சுதந்திர தினத்தை ஒட்டி வெளியான நான்கு படங்களில் மூன்று படங்கள் பிளாக்பஸ்டர்கள் வெற்றி பெற்றுள்ளன. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தற்போது வரை உலகெங்கிலும் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தியில் சன்னி தியோல் நடிப்பில் வெளியான கதர் 2 திரைப்படமும் 500 கோடி வசூலை நெருங்கியுள்ளது. அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘ஓ மை காட் 2’ திரைப்படம் 200 கோடியை நெருங்கியுள்ளது.

சிரஞ்சீவி நடிப்பில் வெளியான போலா ஷங்கர் திரைப்படம் மட்டும் 50 கோடி வசூலித்துள்ளது. இவ்வாறாக 4 படங்களுமே 12 நாட்களில் 1300 கோடி வசூல் செய்துள்ளன. அடுத்தடுத்த மாதங்களில் பல பெரிய படங்கள் வெளியாக இருப்பதால் இதே நிலவரம் தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ