spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமிஸ் யூ அப்பா.... தம்பி உன்னை தேடுறான்ப்பா.... இந்திரஜா ரோபோ சங்கரின் உருக்கமான பதிவு!

மிஸ் யூ அப்பா…. தம்பி உன்னை தேடுறான்ப்பா…. இந்திரஜா ரோபோ சங்கரின் உருக்கமான பதிவு!

-

- Advertisement -

இந்திரஜா ரோபோ சங்கர் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் மிமிக்ரி, நடனம், காமெடி என தனது திறமைகளை வெளிக்காட்டி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரோபோ சங்கர்.மிஸ் யூ அப்பா.... தம்பி உன்னை தேடுறான்ப்பா.... இந்திரஜா ரோபோ சங்கரின் உருக்கமான பதிவு! இவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 46 வயதில் இவர் உயிரிழந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரையும் சிரிக்க வைத்த இவர் தற்போது அழ வைத்துவிட்டு சென்றுவிட்டார் என இவருடைய நண்பர்களும், உறவினர்களும் துக்கத்தில் கதறி வருகின்றனர். இந்நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “அப்பா நீ இல்லாம மூன்று நாள் ஆகிவிட்டது. எங்கள நிறைய சிரிக்க வைத்ததும் நீ தான். இப்போ நிறைய அழவைக்கிறதும் நீ தான். இந்த மூணு நாளும் எனக்கு உலகமே தெரியல. நீ இல்லாம நம்ம ஃபேமிலிய நாங்க எப்படி கொண்டு போக போறோம்னு தெரியல. ஆனா நீ எனக்கு சொல்லிக் கொடுத்த மாதிரி கண்டிப்பா நான் ஸ்ட்ராங்கா இருப்பேன்ப்பா. தம்பி இந்த மூணு நாளா உன்ன ரொம்ப தேடுறான்ப்பா. மிஸ் யூ அப்பா.... தம்பி உன்னை தேடுறான்ப்பா.... இந்திரஜா ரோபோ சங்கரின் உருக்கமான பதிவு!கண்டிப்பா நீ உன்னோட நண்பர்கள், சகோதரர்கள் கூட மேல சந்தோஷமா தான் இருப்ப. நீ சொல்லிக்கொடுத்த மாதிரி நான் விமர்சனங்களுக்கு எப்போதும் பயப்படவே மாட்டேன். கண்டிப்பா உன்னோட பொண்ணுன்னு பெயரைக் காப்பாற்றுவேன். உன்னை பெருமைப்பட வைப்பேன். லவ் யூ, மிஸ் யூ அப்பா. உங்களுக்கும் எனக்கும் ரொம்ப புடிச்ச போட்டோ இது. எல்லோருமே இந்த போட்டோவ பாத்துட்டு அப்படியே உங்க அப்பா ஜெராக்ஸ் என்று சொல்லுவாங்க. நான் எப்போதும் உன்ன மாதிரியே இருப்பேன் அப்பா” என்று உருக்கமாக பதிவிட்டு தனது அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

MUST READ