- Advertisement -
இறுகப்பற்று திரைப்படம் திரையரங்குகளில் 75 நாட்களை கடந்து ஓடி வருகிறது.
தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கியவர் யுவராஜ் தயாளன். இவரது இயக்கத்தில் உருவான அடுத்த திரைப்படம் இறுகப்பற்று. இப்படத்தில் விக்ரம் பிரபு, அவருக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் இதில் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விதாரத்துக்கு ஜோடியாக அபர்னதி நடித்துள்ளார். மேலும் ஶ்ரீ, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜஸ்டின் பிரபாகரன் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. கோகுல் பினாய் இதற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
