Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் 'இறுகப்பற்று' பட டிரைலர்!

கவனம் ஈர்க்கும் ‘இறுகப்பற்று’ பட டிரைலர்!

-

- Advertisement -

இறுகப்பற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் வெளியாகி உள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பில் இறுகப்பற்று எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் இதில் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விதாரத்துக்கு ஜோடியாக அபர்னதி நடித்துள்ளார். மேலும் ஶ்ரீ, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன் எழுதி, இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜஸ்டின் பிரபாகரன் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. கோகுல் பினாய் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கான்செப்ட் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரின் மூலம் மூன்று ஜோடிகளின் திருமண வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இறுகப்பற்று திரைப்படம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ