spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபட்டைய கிளப்பிய 'மகாராஜா' இந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது இவரா?

பட்டைய கிளப்பிய ‘மகாராஜா’ இந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது இவரா?

-

- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.பட்டைய கிளப்பிய 'மகாராஜா' இந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது இவரா? ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் திரைக்கதையை அமைத்திருந்தார் நித்திலன். அதன்படி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்தப் படம் ஓடிடியில் வெளியான பின்பும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. எனவே மகாராஜா பட குழுவினர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டைய கிளப்பிய 'மகாராஜா' இந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது இவரா?அதாவது இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் கைப்பற்றி உள்ளதாகவும், மகாராஜா பட இந்தி ரீமேக்கில் அவரே ஹீரோவாக நடிக்கப் போகிறார் எனவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ