Homeசெய்திகள்சினிமா1500 கோடியை நெருங்குகிறதா பிரபாஸின் 'கல்கி 2898AD'?

1500 கோடியை நெருங்குகிறதா பிரபாஸின் ‘கல்கி 2898AD’?

-

- Advertisement -

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 1,2 திரைப்படங்கள் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இருப்பினும் அதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.1500 கோடியை நெருங்குகிறதா பிரபாஸின் 'கல்கி 2898AD'? அதே சமயம் கடந்தாண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் கல்கி 2898AD என்ற திரைப்படத்தின் மூலம் தான் வசூல் மன்னன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். அதாவது நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கல்கி 2898AD. இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருந்தார். இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மகாபாரத கதையைத் தழுவி பிரம்மாண்டமாக ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.

எனவே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நாளுக்கு நாள் வசூலை வாரிக் குவித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த படம் 17 நாட்களில் ஆயிரம் கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் இப்படமானது 25 நாட்களைக் கடந்து வெற்றி நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை 1100 கோடி வசூலை கடந்துள்ளதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த படம் 1500 கோடியை அள்ளுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ