Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 4'-ஆம் பாகம் இயக்கப் போகிறாரா சங்கர்? ..... அவரே சொன்ன பதில்!

‘இந்தியன் 4’-ஆம் பாகம் இயக்கப் போகிறாரா சங்கர்? ….. அவரே சொன்ன பதில்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். 'இந்தியன் 4'-ஆம் பாகம் இயக்கப் போகிறாரா சங்கர்? ..... அவரே சொன்ன பதில்!இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல்வன், சிவாஜி, அந்நியன் என பல்வேறு வெற்றி படங்களை இயக்கி முக்கியமான இயக்குனராக உருவெடுத்தார். இவர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். அதில் இந்தியன் 2 திரைப்படமானது நாளை (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 'இந்தியன் 4'-ஆம் பாகம் இயக்கப் போகிறாரா சங்கர்? ..... அவரே சொன்ன பதில்!கடந்த 1996 இல் வெளியான இந்தியன் படத்தின் தாக்கத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 26 வருடங்கள் கழித்து இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. எனவே வருடங்கள் அதிகமாக இருப்பது போல படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் இந்தியன் 2 திரைப்படம் படமாக்கப்படும்போது இந்தியன் 3 படத்தையும் இயக்கத் திட்டமிட்ட சங்கர் இந்தியன் 3 படத்தையும் இயக்கி முடித்துள்ளார். படமானது இந்தியன் 2 படத்தின் ரிலீஸுக்கு பின்னர் 6 மாதங்கள் கழித்து வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.'இந்தியன் 4'-ஆம் பாகம் இயக்கப் போகிறாரா சங்கர்? ..... அவரே சொன்ன பதில்! இந்நிலையில்தான் சமீபத்தில் நடந்த பேட்டியில் இயக்குனர் சங்கரிடம், இந்தியன் 4ஆம் பாகம் இயக்கம் திட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சங்கர், “அது போன்ற திட்டம் இல்லை. ஆனால் ‘வேள் பாரி’ என்ற சரித்திர நாவலை மூன்று பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ