spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇது அதுல்ல.... 'வீர தீர சூரன்' படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுவா?

இது அதுல்ல…. ‘வீர தீர சூரன்’ படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுவா?

-

- Advertisement -

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இது அதுல்ல.... 'வீர தீர சூரன்' படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுவா?

சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் தற்போது வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து விக்ரம், மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக சியான் 63 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அதுல்ல.... 'வீர தீர சூரன்' படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுவா?இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் பிரியங்கா அருள் மோகன் அல்லது சாய்பல்லவி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இது அதுல்ல.... 'வீர தீர சூரன்' படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுவா?இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த படத்திற்கு வீரமே ஜெயம் என்று தலைப்பு வைத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. வீரமே ஜெயம் என்றா வார்த்தை மாவீரன் திரைப்படத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ