நடிகர் விஜய், கோட் படத்திற்கு பிறகு தனது 69 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இந்த படத்தை இயக்க உள்ளார். அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் போஸ்டர்களையும் பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் இன்று (அக்டோபர் 4) இந்த படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பூஜையில் விஜய், ஹெச். வினோத்,பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜூ போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தது நாளை (அக்டோபர் 5) இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் என்னவென்றால், இந்த படத்தில் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஏற்கனவே இந்த படம் அரசியல் தொடர்பான கதைக்களம் என்று செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது தெறி படத்தினைப் போல் இந்த படத்தில் நடிகர் விஜய், போலீஸாக நடிக்க இருக்கிறார் என்று புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனவே இது அரசியல் தொடர்பான கதைக்களமா? இல்லை போலீஸ் தொடர்பான கதைக்களமா? என்று ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். இனிவரும் நாட்களில் இது தொடர்பான அப்டேட்கள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.