Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடிக்கும் விஜய் பட நடிகை.......எந்த படத்தில் தெரியுமா?

சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடிக்கும் விஜய் பட நடிகை…….எந்த படத்தில் தெரியுமா?

-

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வினி இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் அயலான் எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தப் படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியுள்ளார். 24 மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ராகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் ஏலியனை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. வருகின்ற தீபாவளியை முன்னிட்டு தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் இப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இஷா கோபிகர், சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடிப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இஷா கோபிகர் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான அரவிந்த் சுவாமியின் என் சுவாசக் காற்றை மற்றும் விஜயின் நெஞ்சினிலே திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ