spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா24 மணி நேரத்திற்குள் அதை செய்ய வேண்டும் இல்லையென்றால்... ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ரவி!

24 மணி நேரத்திற்குள் அதை செய்ய வேண்டும் இல்லையென்றால்… ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ரவி!

-

- Advertisement -

சமீப காலமாக ரவி (ஜெயம் ரவி) – ஆர்த்தியின் விவகாரம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.24 மணி நேரத்திற்குள் அதை செய்ய வேண்டும் இல்லையென்றால்... ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ரவி! அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ரவி- ஆர்த்தி இருவரும் கிட்டத்தட்ட 14 வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் நடிகர் ரவி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஆர்த்தி, தனது கணவருடன் இணைந்து வாழ விரும்புவதாக கூறியிருந்தார். ஆனால் ரவி, ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதன் பிறகு இவர்களின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது இருவரையும் சமரச பேச்சுவார்த்தை நடத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். 24 மணி நேரத்திற்குள் அதை செய்ய வேண்டும் இல்லையென்றால்... ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ரவி!ஆனால் இதில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. நடிகர் ரவி, விவாகரத்து வேண்டும் என்ற தனது முடிவில் உறுதியாக இருந்தார். இது தவிர ரவி – கெனிஷா குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்த நிலையில் ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு ரவியும் பதில் அறிக்கை வெளியிட்டார். பின்னர் மீண்டும் ஆர்த்தி, சுஜாதா விஜயகுமார் ஆகியோர் அடுத்தடுத்த அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இது தொடர்பாக ரவி மோகன் சென்னை நீதிமன்றத்தில், ஆர்த்தியும், அவரது தாயாரும் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ரவி – ஆர்த்தி இருவருமே பொதுவெளியில் அறிக்கை வெளியிடக்கூடாது என்ற தடை விதித்தது. இதற்கிடையில் ஆர்த்தி, ரவி தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிடும்படி கோரிக்கை விடுத்துள்ளார். 24 மணி நேரத்திற்குள் அதை செய்ய வேண்டும் இல்லையென்றால்... ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ரவி!இவ்வாறு ரவி – ஆர்த்தி விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் நடிகர் ரவி தற்போது ஆர்த்திக்கும், அவரது தாயார் சுஜாதா விஜயகுமாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், “தன்னை பற்றி சமூக வலைதளங்களை பகிர்ந்திருக்கும் அனைத்து அவதூறு கருத்துக்களையும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் ஆர்த்தியும், சுஜாதா விஜயகுமாரும் ரவி பற்றிய அறிக்கையை டெலிட் செய்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ