- Advertisement -
இவானா, வெங்கட் செங்குட்டுவன் நடித்துள்ள மதிமாறன் படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவானா. தமிழில் பாலா இயக்கிய நாச்சியார் படத்தின் மூலம் இவர் நாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். தமிழிலும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
