Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்

விஜய் சேதுபதியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்

-

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய தொடரில் மம்முட்டி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது, ஜாக்கி ஷெராஃப் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்வார். தற்போது விஜய் சேதுபதி 51-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து, அவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்கை இயக்கியவர் மணிகண்டன். இவர் இயக்கும் புதிய இணைய தொடரில் விஜய் சேதுபதிவிஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மம்முட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென இந்த கதை இணையத்தொடராக படமாக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த மம்முட்டி படத்தில் இருந்து வௌியேறினார். இதனால், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷெராஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷெராஃப்பை பொறுத்தவரை தமிழில் ஏற்கெனவே ‘ஆரண்ய காண்டம்’, ‘திகில்’, ‘ஜெயிலர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆரண்ய காண்டம், திகில், ஜெயிலர், ஆகிய படங்களில் ஜாக்கி நடித்துள்ளார்.

MUST READ