ஜெய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய் சென்னை 600028, கோவா, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களில் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவரது நடிப்பில் கடைசியாக பேபி & பேபி எனும் திரைப்படம் வெளியானது. கலகலப்பான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத் தொடர்ந்து நடிகர் ஜெய் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஒர்க்கர் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படம் தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு நேற்று (மே 1) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தினை வினய் கிருஷ்ணா எழுதி, இயக்குகிறார். பிரிமுக் நிறுவனத்தின் சார்பில் ஷோபனா ராணி தயாரிக்கிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜெய் உடன் இணைந்து யோகி பாபு, நாகிநீடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுத்தது இந்த படமானது ரொமான்டிக் ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.