ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் இப்படம் 525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வெளியான 20 நாட்களுக்குள், இணையத்தில் ஜெயிலர் HD பிரிண்ட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் படக்குழுவினர்களுக்கு மட்டுமில்லாமல் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஜெயிலர் படத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் பலர் ஜெயிலர் HD பிரிண்ட் லிங்க்கை யாரும் பகிர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் ஜெயிலர் திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிக்க வேண்டும். எந்த வகையிலும் திருட்டுத்தனத்தை ஆதரிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜெயிலர் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.