ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருகிறார் நெல்சன் திலீப்குமார். தற்போது ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.