Homeசெய்திகள்சினிமாஜெயிலர் படத்தின் வெற்றி 3 மாதங்களுக்கு எனக்கு அழுத்தம் கொடுத்தது..... ரஜினி குறித்து டிஜே ஞானவேல்!

ஜெயிலர் படத்தின் வெற்றி 3 மாதங்களுக்கு எனக்கு அழுத்தம் கொடுத்தது….. ரஜினி குறித்து டிஜே ஞானவேல்!

-

சூர்யா மற்றும் மணிகண்டன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிஜே ஞானவேல்.ஜெயிலர் படத்தின் வெற்றி 3 மாதங்களுக்கு எனக்கு அழுத்தம் கொடுத்தது..... ரஜினி குறித்து டிஜே ஞானவேல்! இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் போலி என்கவுண்டர் குறித்து பேசி உள்ள இந்த படம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி இந்த படம் ஒரே நாளில் 65 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் டிஜே ஞானவேல் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து பேசியுள்ளார்.ஜெயிலர் படத்தின் வெற்றி 3 மாதங்களுக்கு எனக்கு அழுத்தம் கொடுத்தது..... ரஜினி குறித்து டிஜே ஞானவேல்! “வேட்டையன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நான் எதிர்பார்த்தது ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றி எனக்கு மூன்று மாதங்களுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய என்னால் உழைக்க முடியவில்லை. நான் எழுதியதற்கு என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். அதனால்தான் ரஜினி சார், எனக்கு வேற ஜெயிலர் வேண்டுமென்றால் நெல்சனிடம் மறுபடியும் போய் இருப்பேன். உங்க ஸ்டைலில்தான் வேண்டும் என்றார்” என டிஜே ஞானவேல் தெரிவித்துள்ளார்.

MUST READ