நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி தயாரிப்பில் ஜல்லிக்கட்டு ஆவணப்படம்
- Advertisement -
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஜல்லிக்கட்டு ஆவணப் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கோலிவுட்டின் பெரும் நட்சத்திர தம்பதி நயன்தாரா – விக்னேஷ் சிவன். லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர். சினிமாவில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவனும் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.

இது தவிர இந்த நட்சத்திர தம்பதியினர் ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரித்த கூலாங்கள் திரைப்படம் அண்மையில் வெளியானது. ஆனால், வெளியீட்டிற்கு முன்பாகவே இத்திரைப்படம் பல சர்வதேச விருது விழாவில் தேர்வாகி பல விருதுகளை வென்றுள்ளது. இவர்கள் தற்போது ஜல்லிக்கட்டு போட்டியின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் விளக்கும் விதமாக ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர்.
இது தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன், வீடியோ ஒன்றை டீசராக பதிவிட்டுள்ளார். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சரித்திரம், ஆவணக் கதையாக உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். முழுக்க முழுக்க கிராமங்களை மையமாக கொண்டு நிஷாந்த் பியோ இயக்கியுள்ள இந்த படத்திற்கு வேர்கள் என தலைப்பு வைத்துள்ளனர்.