spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் அவதாரம் எடுக்கும் அவதார் 4... அடுத்த மாதம் படப்பிடிப்பு...

மீண்டும் அவதாரம் எடுக்கும் அவதார் 4… அடுத்த மாதம் படப்பிடிப்பு…

-

- Advertisement -
அவதார் 4-ம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹாலிவுட் திரையுலகில் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கில் திரைப்படங்கள் வெளியாகினாலும், அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மொழியைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பிரபலம் அடையும். ஆங்கில மொழியைத் தாண்டி தமிழ்,தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும், இந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். அந்த வகையில், கடந்த 2009-ம் ஆண்டு வௌியான அவதார் திரைப்படம் மொத்த உலகையும் ஹாலிவுட் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. பேண்டசி திரைப்படங்கள் பல வந்தாலும் அவதார் அதன் அடையாளமாக மாறிப்போனது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான இப்படம் உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்தது.

we-r-hiring
அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அவதார் தி வே ஆப் வாட்டர் திரைப்படம், கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வெளிநாடுகள் மட்டுமன்றி இந்தியாவிலும் வசூலை அள்ளியது. 2.3 பில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்தது. உலகளவில் வசூல் மழை பொழிந்த அவதார் படத்தின் 3-வது பாகம் டிசம்பர் 19 2025ம் ஆண்டு வெளியாகும் என ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். சிறந்த டீசரை வழக்குவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், மூன்றாவது பாகத்தில் மற்றொரு புதிய உலகம் வித்தியாசமான கதை மற்றும் பல அதிரடி காட்சிகளை காணலாம் என்று உறுதி அளித்திருந்தார்

இந்நிலையில், தற்போது அவதார் படத்தின் 4-ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அடுத்த பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வரும் 2029-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவதார் 4-ம் பாகம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ