இந்திய திரையுலகில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என தென்னிந்திய மற்றும் வட இந்திய மொழிகளில் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இந்திய மொழிகள் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் ஒரு சில படங்களில் ஸ்ரீ தேவி நடித்துள்ளார். 80-ஸ் லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீ தேவி 2018-ம் ஆண்டு துபாயில் கணவருடன் இருந்தபோது, மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் ஜான்வி கபூர், இரண்டாவது மகள் குஷி கபூர். இருவருமே சினிமாவில் கலக்கி வருகின்றனர். மூத்த மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து தேவரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவுக்கும் அறிமுகமாகிறார்.
தேவரா படத்தைத் தொடர்ந்து ராம்சரணுடன் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அப்போது, தனக்கு சம்பளமாக 10 கோடி ரூபாய் கேட்டதால் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அறிமுக படத்திற்கு 5 கோடி ரூபாய் ஊதியம் கேட்ட ஜான்வி கபூர், அடுத்த இரண்டாவது படத்திற்கே 10 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.