- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், காலணி அணியாமல் வெறுங்காலில் நடந்து சென்ற கோயிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளரும் நடிகருமான போன கபூருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர், இளைய மகள் குஷி கபூர். ஜான்வி கபூர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தி திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடித்த கோலாமவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். அதேபோல, மலையாள படத்தின் இந்தி ரீமேக்கிலும் அவர் நடித்து புகழ் பெற்றார்.
இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், கடந்த ஆண்டு தெலுங்கிலும் தடம் பதித்தார். ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் தேவரா திரைப்படத்தில் அவர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம், அவர் தெலுங்கிலும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ராம்சரண் நடிக்கும் 16-வது திரைப்படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Janhvi Kapoor walks barefoot to Siddhivinayak mandir. Scenes from Prabhadevi outside the temple, late in the evening. #FilmyApe #Bollywood #JanhviKapoor pic.twitter.com/wNQgX8nNRo
— Filmyape (@Filmyape) April 9, 2024
