spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜனநாயகன் பட வழக்கு...தனி நீதிபதிக்கு மீண்டும் மாற்றம்...

ஜனநாயகன் பட வழக்கு…தனி நீதிபதிக்கு மீண்டும் மாற்றம்…

-

- Advertisement -

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி வசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.ஜனநாயகன் பட வழக்கு...தனி நீதிபதிக்கு மீண்டும் மாற்றம்...

 

we-r-hiring

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கில், சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம், தனி நீதிபதி வழங்கிய தணிக்கைச் சான்று வழங்கும் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதனால், திரைப்பட வெளியீட்டில் தொடர்ந்தும் சிக்கல் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திரைப்படத்தில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மத மோதலைத் தூண்டுவதாக சில வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக சென்சார் போர்டு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜனநாயகன் படத்துக்கு எதிராக தீவிரமான புகார்கள் உள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்ய தணிக்கை வாரியத்திற்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டியிருந்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், மறுஆய்வுக்கு அனுப்புமாறு தனி நீதிபதி பிறப்பித்திருந்த முந்தைய உத்தரவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் புதிய கோரிக்கையுடன் மீண்டும் தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய்யலாம் எனவும், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி வசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், ஜனநாயகன் பட வெளியீடு மேலும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…

MUST READ