- Advertisement -
கிராமி விருது விழாவில் வழங்கப்பட்ட கோப்பையில், பாப் பாடகர் ஒருவர் மதுபானம் அருந்தி குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அனைத்து உலக திரைத்துறையிலும் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு பல தரப்பட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய அளவில் தேசிய விருது உயரிய விருதாக கருதப்படுகிறது. அதேபோல, ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளும் உலக அளவில் உயரிய விருதாக பேசப்படும். அதேபோல, இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகள் ஒன்று கிராமி விருது. அந்த வகையில் 66-வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில், சிறந்த இசைக்கலைஞர்கள், பாடகர்கள், சிறந்த பாடல், சிறந்த ஆல்பம், மற்றும் பாடல் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த ஆல்பத்திற்கான பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. தி மொமண்ட் என்ற ஆல்பத்திற்காக விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த இசைக்குழுவில், உஸ்தாத் ஜாகீர் உசேன், செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், ஷங்கர் மகாதேவன் ஆகியோர் இடம்பெற்றனர். அதேபோல, அமெரிக்காவின் பாப் பாடகர் ஜெ இசட்டுக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.
JAY-Z turns his GRAMMY into a drink cup after using his speech to call out The Academy on Beyoncé's behalf. pic.twitter.com/3Srr2mUlRx
— BEYONCÉ LEGION (@BeyLegion) February 5, 2024
