Homeசெய்திகள்சினிமா'சைரன்' படத்தில் இரட்டைக் கதாபாத்திரங்களில் கலக்கும் ஜெயம் ரவி!

‘சைரன்’ படத்தில் இரட்டைக் கதாபாத்திரங்களில் கலக்கும் ஜெயம் ரவி!

-

‘சைரன்’ படத்தில் ஜெயம் ரவி இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி தற்போது ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரும் படத்தில் இருக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முன்னோட்டம் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. அதில் ஜெயம் ரவி நரைத்த முடியுடன் வயதான தோற்றத்தில் கையில் ரத்தம் கறை படிந்த பட்டா கத்தியுடன் மிரட்டலாக காட்சி அளித்தார்.

இந்நிலையில் சைரன் படத்தில் ஜெயம் ரவி இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் வயதான தோற்றத்திலும், இளைஞனாகவும் அவர் நடிக்கிறாராம்.

இரண்டு கதாபாத்திரங்களுக்கு இரண்டு நடிகைகள் என்று இருக்கும் போல. நம் கணிப்பின் படி கீர்த்தி சுரேஷ் வயதான ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், அனுபமா இளைஞன் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் நடிக்கலாம்.

இதற்கிடையில் ஜெயம் ரவி இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ படத்திலும் அதே இயக்குனருடன் ‘ஜன கண மன’ படங்களிலும் நடித்துள்ளார்.

MUST READ