நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 21) சென்னையில் நடைபெற்று வருகிறது. அதேசமயம் படத்தின் அடுத்தடுத்த பாடல்களையும் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தான் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயம் ரவி பாடகி கெனிஷா குறித்து பேசி உள்ளார். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர்களின் பிரிவிற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் எனவும் தனுஷ் – ஆர்த்தியை சம்பந்தப்படுத்தி பல தகவல்கள் இணையத்தில் பரவத் தொடங்கியது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் பாடகி கெனிஷா தான் நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவிற்கு காரணம். ஜெயம் ரவி தான் ஒரு மாதம் கோவாவில் கெனிஷாவுடன் இருந்திருக்கிறார் என பிரபல பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Deaf Frogs என்ற ஆல்பத்தினை கெனிஷா பிரான்சிஸ் பாடி இருந்த நிலையில் அதனை ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, ஜீவா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். திருமணமாகி விவாகரத்தான கெனிஷா தான் ஜெயம் ரவியின் தீவிர ரசிகை என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்த நிலையில் அவருடைய வருகைக்குப் பிறகுதான் தான் ஜெயம் ரவி- ஆர்த்தி வாழ்வில் விரிசல் ஏற்பட்டது என்றும் இவர்களின் பிரிவிற்கு கெனிஷா தான் காரணம் என்றும் ஊடகங்களில் செய்திகள் பரவத் தொடங்கி பூகம்பத்தை கிளப்பியது.
“I just want to say one thing ‘LIVE & LET LIVE’. Don’t drag anyone into my PERSONAL life. Me & Kenisha just want to open a healing centre and help many people”
– JayamRavi pic.twitter.com/lKhE3OFSzf— AmuthaBharathi (@CinemaWithAB) September 21, 2024
இந்த நிலையில் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்தபோது, “வாழு, வாழ விடு. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரையும் இழுக்காதீர்கள். நானும் கெனிஷாவும் சிகிச்சை மையத்தை திறந்து பலருக்கும் உதவ இருக்கின்றோம். தயவு செய்து அதை கெடுக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.