spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇயக்குனராக மாறும் ஜெயம் ரவி.... ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனராக மாறும் ஜெயம் ரவி…. ஹீரோ யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் உருவாகியுள்ளது. அகமது இயக்கியுள்ள இந்த படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று இறைவன் படத்தின் பிரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, எச் வினோத் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய விஜய் சேதுபதி, “போகன் திரைப்படத்தில் அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் என்னை தான் கேட்டார்கள். அந்த சமயம் கால்ஷீட் பிரச்சனையால் என்னால் நடிக்க முடியவில்லை. ஆனால் நல்ல கதை அமைந்தால் ஜெயம் ரவியும் நானும் ஹீரோவாக நடிப்போம்” என்று பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி, ” நான் படம் இயக்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் நீங்கள் தான் என் நினைவுக்கு வருகிறீர்கள். நான் உங்களை இயக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் அதற்கான கால்ஷீட் கொடுங்கள்” என்று விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார்.

we-r-hiring

ஜெயம் ரவி, விஜய் சேதுபதி காம்போவில் புதிய படம் உருவானால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

MUST READ