spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகிருத்திகாவின் காதலிக்க நேரமில்லை... படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்...

கிருத்திகாவின் காதலிக்க நேரமில்லை… படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்…

-

- Advertisement -
தமிழில் வணக்கம் சென்னை படத்தின் மூலம் திரை உலகில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து பேப்பர் ராக்கெட் என்ற இணைய தொடரை இயக்கினார். இதில், காளிதாஸ் ஜெயராம், தன்யா, கருணாகரன், கௌரி கிஷன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அடுத்து அவர் இயக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இதில் ஜெயம்ரவி மற்றும் பிரபல மலையாள நடிகை நித்யா மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியானது.

ரொமான்ஸ் படமான இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

MUST READ