Homeசெய்திகள்சினிமாவெளியீட்டுக்கு தயாரான ஜெயம் ரவியின் பிரதர்... ஜூலையில் இசை வெளியீட்டு விழா... வெளியீட்டுக்கு தயாரான ஜெயம் ரவியின் பிரதர்… ஜூலையில் இசை வெளியீட்டு விழா…
- Advertisement -
ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வௌியாகின. பொன்னியின் செல்வனாக ஜெயம்ரவியின் தோற்றம் மற்றும் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. அவரது திரைப் பயணத்தில் பொன்னியின் செல்வன் மைல் கல்லாக அமைந்தது. இதைத் தொடர்ந்து நயன்தாராவுடன் ஜெயம்ரவி இணைந்து நடித்த இறைவன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றன. இதைத் தொடர்ந்து சைரன் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் பிரதர். இப்படத்தை, எம் ராஜேஸ் இயக்கி இருக்கிறார். அக்கா, தம்பி இடையேயான உறவை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. மேலும் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி நட்ராஜ், சரண்யா பொன்வண்ணன், சீதா, பூமிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் தோற்றம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரதர் திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி விட்டதாகவும், வரும் ஜூலை முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.