நடிகர் ஜெயராம் கடந்த 2020 ஆம் ஆண்டு ‘மகள்’ என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழில் மணிரத்தினம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இக்கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதைத்தொடர்ந்து நடிகர் ஜெயராம் நடிக்கும் ஆபிரகாம் ஓஸ்லர் என்னும் மலையாள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இப்படத்தினை இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்குகிறார். இவர் ஆடு ,ஆடு 2, அஞ்சாம் பதிரா போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஜெயராம் நடிக்கிறார். ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் மெடிக்கல் க்ரைம் கதையாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் மிதுன் முகுந்தன் இசையமைக்கிறார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்டர் ரசிகர்களிடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இந்த போஸ்டரை ஷேர் செய்துள்ள நடிகர் கார்த்தி ‘நம்பி சார் கெட்டப் சூப்பர்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.