- Advertisement -
ஊர்வசி மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெ பேபி படத்திலிருந்து புதிய பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை ஊர்வசி. 1980 காலகட்டங்களில் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஊர்வசி. பாரதிராஜாவின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் நகைச்சுவையான நடிப்பு ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. நூற்றுக்கணக்கில் பல மொழிப் படங்களில் நடித்துள்ளார் ஊர்வசி. அடுத்தடுத்து நூற்றுக்கணக்கில் படங்களில் நடித்து வந்தார்.
