spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஅமானுஷ்யங்கள் நிறைந்த 'ஜென்ம நட்சத்திரம்' பட டீசர் வைரல்!

அமானுஷ்யங்கள் நிறைந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ பட டீசர் வைரல்!

-

- Advertisement -

ஜென்ம நட்சத்திரம் படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.அமானுஷ்யங்கள் நிறைந்த 'ஜென்ம நட்சத்திரம்' பட டீசர் வைரல்!

கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் தமன் நடிப்பில் நொடி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மணிவர்மன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் வேலராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். க்ரைம் திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. தற்போது மணிவர்மன் – தமன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஜென்ம நட்சத்திரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படமானது ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இதில் தமனுடன் இணைந்து மால்வி மல்கோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா ஷெரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷ்காந்த், வேலராம மூர்த்தி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். சஞ்சய் மாணிக்கம் இந்த படத்திற்கு இசையமைக்க கேஜி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

we-r-hiring

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் அமானுஷ்யமான காட்சிகள் காட்டப்படுகின்றன. இந்த டீசரை பார்க்கும்போது இப்படம், நொடி படத்தை போல் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படமானது விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

MUST READ