spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜீவா, அர்ஜுன் கூட்டணியின் 'அகத்தியா' ...... ட்விட்டர் விமர்சனம்!

ஜீவா, அர்ஜுன் கூட்டணியின் ‘அகத்தியா’ …… ட்விட்டர் விமர்சனம்!

-

- Advertisement -

அகத்தியா படத்தின் ட்விட்டர் விமர்சனம்.ஜீவா, அர்ஜுன் கூட்டணியின் 'அகத்தியா' ...... ட்விட்டர் விமர்சனம்!

ஜீவா நடிப்பில் இன்று (பிப்ரவரி 28) வெளியாகியுள்ள திரைப்படம் தான் அகத்தியா. இந்த படத்தை பா. விஜய் இயக்கியுள்ளார். இதில் ஜீவாவுடன் இணைந்து அர்ஜுன், ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மிஸ்டரி திரில்லரில் உருவாகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த படம் குறித்து தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில் ரசிகர் ஒருவர், “இந்த படம் ஒரு எளிய கதை. ஆனால் அவர்கள் இந்த கதையை இரண்டு காலகட்டங்களில் இருந்து எடுத்திருக்கின்றனர். முதல் 20 நிமிடங்கள் நகைச்சுவையாக நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஜீவா மற்றும் ராஷி கன்னா நடிப்பு ஓகே. முதல் பாதி ஒரு திருப்பத்துடன் முடிகிறது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி நன்றாக இருந்தாலும் கார்ட்டூன் போல எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கிளைமாக்ஸிலும் ஒரு திருப்பம் இருக்கிறது. இந்த படம் சராசரியான படம்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “ஒரு நல்ல ஹாரர் காமெடி ஆக்சன் ஃபேண்டஸி திரில்லர் படம். இந்த படத்தில் பீரியட் போர்ஷனும், நிகழ்கால போர்ஷனும் இருக்கிறது. இந்த படம் சித்த மருத்துவ பயன்கள் பற்றி பேசுகிறது. ஜீவா நன்றாக நடித்துள்ளார். அர்ஜுன்தான் பேரலல் லீட். ராஷி கன்னா நன்றாக நடித்துள்ளார். கிளைமாக்ஸ் -இல் இடம்பெற்ற அனிமேஷன் ஆக்சன் காட்சிகள் குழந்தைகளுக்கு விருந்தாக இருக்கும். பா. விஜய் சுவாரஸ்யமான ஃபேண்டஸி பொழுதுபோக்கு படத்தை உருவாக்கியுள்ளார்” என்று தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

MUST READ