- Advertisement -
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஸ்வா திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது மார்ச் 1-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கில் இயக்குநர்கள் இருந்தாலும், அவர்களின் கண்ணோட்டமும், பட இயக்கமும் மாறுபட்டு இருக்கும். அந்த வகையில், காதலை மாறுபட்ட கோணத்தில் திரைக்கு வரும் கல்ட் இயக்குநர் கௌதம் மேனன். மின்னலே படத்தில் தொடங்கிய கௌதமின் திரைப்பயணம் என்றுமே ஏறுமுகம் தான். கௌதம் மேனனின் படங்களுக்கு மட்டுமன்றி, அவரது வசனத்திற்கும், அவரது குரலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


கௌதம் மேனன் இயக்கத்தில் இறுதியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. இதில் சிம்பு நாயகனாக நடித்திருந்தார். கௌதம் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. பல ஆண்டுகளாக இத்திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில், வருண் நாயகனாக நடித்திருந்தார். மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.



